பாரம்பரிய முறையில் மசாலா பொருட்கள்.. Mrs பிரேம்ஜியின் அம்மா துவங்கிய புது பிசினஸ் - லேட்டஸ்ட் அப்டேட்!

Indhu Premji : கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன், இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் பிரபல நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான பிரேம்ஜி அமரன். வெளிநாடுகளுக்குச் சென்று இசைப் பயிற்சியை மேற்கொண்டுள்ள பிரேம்ஜி அமரன், தனது 45வது வயது வரை சிங்கிளாக தான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் இந்து என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்பு தனது ஆசை கணவர் பிரேம்ஜியோடு செய்யும் சேட்டைகளை, இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் ஒரு விழிப்புணர்வு பதிவினை போட்டிருந்தார். அதாவது தினமும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கலக்கப்படும் மசாலாக்களில் உள்ள நச்சுத்தன்மை குறித்து அவர் பேசியிருந்தார். 

Latest Videos

தனுஷ் இயக்கத்தில் "ராயன்".. "அதில் நான் ஒரு "ஓநாய்" மாதிரி" - பர்த்டே பாய் SJS உடைத்த படத்தின் சீக்ரெட்!

ஆனால் திடீரென்று அவர் இதுபற்றி பேச என்ன காரணம் என்றும் பலரும் விடை தெரியாமல் விழித்து வந்த நிலையில், பராம்பரிய முறைப்படி அரைக்கப்பட்ட மசாலா பொருட்களை தனது தாய் விரைவில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் இந்து பிரேம்ஜி. மக்கள் தான் தங்கள் பிராண்டிற்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)

தனது தாயுடன் இணைந்து இந்த புதிய பிசினஸை இந்துவும் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இந்துவிற்கும், பிரேம்ஜி அமரனுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி செய்யும் சேட்டைகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாகி வருவதும் அனைவரும் அறிந்ததே. 

ராயன் பட இசை வெளியீட்டு விழா.. தனுஷை பங்கமாய் கலாய்த்த செல்வா - Audio Launch எப்போது ஒளிபரப்பாகிறது?

click me!