நடிகர் பாலா, ஒரு கை இல்லாமல் கஷ்டப்பட்ட ஆணுக்கு செயற்கை கை ஒன்றை வாங்கிக் கொடுத்து உதவிய வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. அந்நிகழ்ச்சியில் அவர் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அவரது திறமையை பார்த்து வியந்துபோன விஜய் டிவி அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கியது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாலாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அதில் இவர் போடும் டைமிங் காமெடிகள் வேறலெவலில் ரீச் ஆகி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற திரை நட்சத்திரங்களே அவருக்கு ரசிகனாக மாறினர்.
இப்படி சின்னத்திரையில் கலக்கி வரும் பாலாவுக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் வராவிட்டாலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அதன்மூலம் சம்பாதிக்கும் பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் இவர் செய்த உதவிகள் ஏராளம், ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது முதல், ஏழை எளியவர்களுக்கு உதவியது வரை லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... Rajkiran Home Tour : வீட்டிலேயே மாமியாருக்காக ஸ்பெஷல் கோவில்... வியக்க வைக்கும் ராஜ்கிரணின் பிரம்மாண்ட வீடு
அந்த வகையில் தற்போது மற்றுமொரு உதவும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாலா. அதில் செயற்கை கையுடன் சர்ப்ரைஸாக சென்று ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தித்து அவருக்கு அந்த செயற்கை கையை மாட்டிவிட்டு அவருக்கு மேலும் நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் பாலா. அவர் செய்த இந்த உதவியால் அந்த மாற்றுத்திறனாளி செம்ம ஹாப்பியாகி பாலா உடன் தன்னுடைய செயற்கை கையால் HiFi போட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாவின் செயலை மனதார பாராட்டியதோடு, மேலும் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என ஊக்குவித்து வருகின்றனர். நடிகர் பாலா, தன்னுடைய சொந்த செலவில் மட்டுமல்லாது, இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளை மூலமும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். விரைவில் பாலாவை ஹீரோவாக நடிக்க வைக்கும் பணிகளையும் ராகவா லாரன்ஸ் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குடிக்க இல்ல... குளிக்க மினரல் வாட்டர் வேணும்; ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த நடிகை.. அப்செட்டான இயக்குனர்