- Home
- Gallery
- குடிக்க இல்ல... குளிக்க மினரல் வாட்டர் வேணும்; ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த நடிகை.. அப்செட்டான இயக்குனர்
குடிக்க இல்ல... குளிக்க மினரல் வாட்டர் வேணும்; ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த நடிகை.. அப்செட்டான இயக்குனர்
பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு குளிக்க மினரல் வாட்டர் வேணும் என கேட்டு அடம்பிடித்ததாக இயக்குனர் ஒருவர் கூறி இருக்கிறார்.

Meera Chopra
பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா, இவரது உறவுக்கார பெண்ணான மீரா சோப்ராவும் ஒரு நடிகை தான். அவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பொதுவாக நடிகைகள் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொள்வதுண்டு, அப்படி மீரா சோப்ரா தமிழில் அறிமுகமாகும் போது நிலா என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
Actress Meera Chopra
அன்பே ஆருயிரே படம் ஹிட்டானதை தொடர்ந்து நிலாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்தடுத்து லீ, ஜாம்பவான், காளை, மருதமலை, ஜெகன்மோகினி போன்ற படங்களில் நடித்தார். இதில் மருதமலை தவிர மற்ற படங்கள் அனைத்தும் பிளாப் ஆனது. தமிழில் மார்க்கெட் டல்லானதை தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கினார் மீரா சோப்ரா. ஒரு கட்டத்தில் தென்னிந்திய திரையுலகில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார்.
இதையும் படியுங்கள்... Rajkiran Home Tour : வீட்டிலேயே மாமியாருக்காக ஸ்பெஷல் கோவில்... வியக்க வைக்கும் ராஜ்கிரணின் பிரம்மாண்ட வீடு
Actress Nila
பின்னர் இந்தியில் ஒருசில படங்களில் நடித்த மீரா சோப்ரா 41 வயதில் திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது, தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை காதலித்து கரம்பிடித்தார் மீரா சோப்ரா. இந்நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பிசியாக நடித்த போது செய்த அட்ராசிட்டியை பிரபல இயக்குனர் ஒருவர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.
Tamil Movie Actress Meera Chopra
அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ஜாம்பவான் படத்தில் நடித்தபோது, குற்றால அருவியில் அவர் குளிக்கும் படியான காட்சி ஒன்றை படமாக்க முடிவெடுத்து அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீரை நிரப்பி மீரா சோப்ராவை நடிக்க அழைத்தார்களாம். அங்கு வந்து பார்த்த அவர் அய்யய்யோ இந்த தண்ணீலலாம் நான் குளிக்க மாட்டேன். எனக்கு மினரல் வாட்டர் வேணும் என கேட்டு அடம்பிடித்திருக்கிறார்.
Meera Chopra Demand
12 ஆயிரம் லிட்டர் பிடிக்கும் அந்த டேங்கில் எப்படி மினரல் வாட்டரை நிரப்புவது என கடுப்பான இயக்குனர். இந்த விஷயத்தை தயாரிப்பாளர் காதுக்கு கொண்டு சென்று இருக்கிறார். அவர் ஏற இறங்க பார்த்துவிட்டு அதெல்லாம் பண்ண முடியாது என சொல்லிவிட்டாராம். உடனே மீரா சோப்ரா கோபித்துக் கொண்டு ஷூட்டிங்கை விட்டு கிளம்பிச்சென்றுவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... அரசியல்வாதியாக முதல் ஆடியோ லாஞ்ச்.. தடபுடலாக நடக்க உள்ள விஜய்யின் கோட் பட இசை வெளியீட்டு விழா- எப்போ தெரியுமா?