'சர்வைவர்' நிகழ்ச்சியில் நடந்தது சம்பவம் என்ன? திடீர் என நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்..!

Published : Oct 06, 2021, 06:51 PM ISTUpdated : Oct 06, 2021, 07:01 PM IST
'சர்வைவர்' நிகழ்ச்சியில் நடந்தது சம்பவம் என்ன? திடீர் என நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்..!

சுருக்கம்

விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் (Survivor) நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து... சிங்கப்பூரை சேர்ந்த ராப் பாடகி (Rap Singer) , லேடி காஷ் (Lady Kash) தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து... சிங்கப்பூரை சேர்ந்த ராப் பாடகி, லேடி காஷ் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: என்ன மாலு இதெல்லாம்..? கட்டழகை அப்பட்டமாக காட்டும் படு மோசமான உடையில் அதகளம் பண்ணும் மாளவிகா மோகனன்!

 

மிகவும் வித்தியாசமாக எடுக்கப்படும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள சர்வைவர் நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் பிரபலங்கள், ஒவ்வொரு டாஸ்க்கையும் எதிர்கொள்ளும் முறை, மிகவும் வித்தியாசமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படும் முறையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இந்நிலையில் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட லேடி காஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வேறு வழியே இல்லாமல் வெளியேறியுள்ளதாக உணர்ச்சிவசம் பொங்க பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: அண்ணன் செல்வராகவன் வீட்டில் களைகட்டிய பார்ட்டி! தவறாமல் கலந்து கொண்ட தனுஷ்! வைரல் போட்டோஸ்...

 

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது...  இன்னும் 8 நாட்களில் 'சர்வைவர்' நிகழ்ச்சி முடிய உள்ளது. நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படவில்லை. நானாக வேறு வழியே இல்லாமல் வெளியேறுகிறேன். அதையும் தாண்டி ஒரு பெரிய சம்பவம் நடந்து உள்ளது. அதனால் நான் அனாவசியமாக விளையாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்.

மேலும் செய்திகள்:தயவு செஞ்சி நீக்கிடுங்க: கெஞ்சாத குறையாய் கேட்க்கும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா மனைவி! அதிர்ச்சி பதிவு!

 

அந்த சம்பவம் குறித்து விரைவில் என்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் அனைவரும் தெறித்து கொள்ளும்படி அறிவிப்பேன். அது மிகவும் முக்கியமானது கவனமாக படித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். நான் எதையும் தைரியமாக சொல்லும் குணமுடையவர். எனக்கு யார் மீதும் பயம் இல்லை. உண்மையை துணிந்து வந்து சொல்ல ஏன் பயம் கொள்ளவேண்டும். எப்போதுமே மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் தவறான விஷயங்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள். ஆனால் நான் துணிந்து சொல்ல போகிறேன். எனக்கு எப்பொழுதும் போல் ஆதரவு கொடுப்பீர்கள் என நண்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இது தான் காரணமா? செல்போனில் இருந்தது என்ன? அதிரடி காட்டும் NCB ..!

சிங்கப்பூரை சேர்ந்த ராப் பாடகியான இவருடைய உண்மையான பெயர் கலைவாணி என்றாலும், இவரை பலருக்கும் லேடி காஷ் என்றால் தான் தெரியும். மேலும் இந்த வீடியோவில் விரைவில் சென்னை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?