
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில், இமான் அண்ணாச்சியால் சண்டை சூடு பிடித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், சேலம் பொண்ணு மாடல் சுருதி குலுங்கி... குலுங்கி அழகுகிறார். இவருக்கு பஞ்ச் டயலாக் மூலம் ஆறுதல் கூறுகிறார், இசை வாணி.
மேலும் செய்திகள்: ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இது தான் காரணமா? செல்போனில் இருந்தது என்ன? அதிரடி காட்டும் NCB ..!
இந்த புரோமோவில்... 'நான் அழவே கூடாது என்று நினைத்தேன்' என கண்ணில் வரும் தண்ணீரை சுருதி துடைக்கிறார். அப்போது இசை வாணி உனக்கு அழணும்னு தோணுச்சுனா அழு என கூறுகிறார். இதை கேட்ட சுருதி, என்னுடைய அழுகை தான் என்னை பலப்படுத்தியுள்ளது அதனால் நான் அழுவேன் என கூறுகிறார். பின்னர் பஞ்ச் டயலாக் மூலமாகவே இசை வாணி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். 'ஒருத்தவங்க நம்பள ஒதுக்குரங்கனா அவங்க நம்பள செதுக்குறாங்கனு அர்த்தம்' என்று. பின்னர் சுருதி பலர் நம்புடைய நிறத்தை வைத்தே டாமினேட் பண்ணுவாங்க என கூறுகிறார்.
மேலும் செய்திகள்: தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் முன்னணி நடிகரின் மகள் நடிக்கிறாரா? அப்போ வேற லெவல் தான்..!!
இதற்க்கு இசைவாணி அசராமல், எதை ஒதுக்குறாங்களோ அது தான் தனியாக தெரியும் என அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் சுருதி இந்த கலர் மூலமாக தான் நான் இங்கு வந்து நிற்பதாகவும், தனக்கு எவ்வளவு கஷ்டமெல்லாம் வரவில்லை என்றால் பிக்பாஸ் வீடு வரை வந்திருக்க மாட்டேன் என்று கூறுவதோடு இந்த புரோமோ முடிவடைந்துள்ளது. ஆனால் திடீர் என சுருதி அழ காரணம் என்ன? என்பது இன்றைய எபிசோட் மூலம் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.