வாரே வா... சண்டையால் சூடுபிடிக்கும் 'பிக்பாஸ்' வீடு! முதல் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அண்ணாச்சி!

Published : Oct 06, 2021, 10:44 AM ISTUpdated : Oct 06, 2021, 10:47 AM IST
வாரே வா... சண்டையால் சூடுபிடிக்கும் 'பிக்பாஸ்' வீடு! முதல் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அண்ணாச்சி!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss seasson 5) கடந்த இரண்டு நாட்களாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக சென்ற நிலையில், இன்றைய தினம் படு ஜோராக, அதுவும் அண்ணாச்சியால் (iman Annachi) சண்டை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்த புரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக சென்ற நிலையில், இன்றைய தினம் படு ஜோராக, அதுவும் அண்ணாச்சியால் சண்டை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்த புரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: காட்டன் சேலையில்... சொட்ட சொட்ட நனைந்தபடி வளைத்துவளைத்து போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி! போட்டோஸ்

நேற்றைய தினம், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு முதல் லக்ஸூரி டாஸ்காக, அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு கதையாக கூற வேண்டும் என்றும், இதற்க்கு மற்றவர்கள் தங்களுடைய கருத்தை எமோஜி  மூலம் தெரிவிக்காமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம், இசை வாணி, மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் தாங்கள் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

இவர்களை தொடர்ந்து இன்றைய தினம், பிரபல காமெடி நடிகரும் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி தன்னுடைய வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டு, பேசும் போது... இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஒரு காமெடி நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என்பதுபோல் கூறி சிரிக்கிறார். இவர் சிரித்தது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தியது என, இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ மூலம் தெரிகிறது.

மேலும் செய்திகள்: இவருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா? யார் அவர்? வைரலாகும் புகைப்படம்..!

 

நதியா இதுகுறித்து அவர் அங்கு பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கிறார். பின்னர் இவர் சிரித்ததற்காக... நிரூப்புக்கும், சிபிக்கும் இடையே சண்டை வருவதையும் பார்க்க முடிகிறது. திருநங்கை போட்டியாளரான நமீதா, கஷ்டப்பட்டோம் கஷ்டப்பட்டோம் என சொல்ல வேண்டாம்... கஷ்டப்பட்டால் தான் இந்த இடத்திற்கு வர முடியும் என கூறுகிறார். பின்னர் நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு இடையே சண்டை வரும் காட்சிகளும் காட்டப்படுகிறது. புரோமோவில் இறுதியில் நமீதா, ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் முடிவடைகிறது.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய்னா சும்மாவா...!! வெள்ளை நிற உடையில் பாரிஸ் ஃபேஷன் வீக்கை தெறிக்க விட்ட போட்டோஸ்..!

 

எப்படியோ... அண்ணாச்சி புண்ணியத்தால் பல பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இன்றைய தினம் சில பிரச்சனைகளுக்கும் குறைவிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!