சன்னிலியோன் வெட்கப்படும் அளவுக்கு புகழ்பாடும் காமெடி நடிகர்… இணையத்தில் வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!

Published : Oct 05, 2021, 05:27 PM ISTUpdated : Oct 05, 2021, 06:04 PM IST
சன்னிலியோன் வெட்கப்படும் அளவுக்கு புகழ்பாடும் காமெடி நடிகர்… இணையத்தில் வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!

சுருக்கம்

தமிழில் உருவாகும் வரலாற்று பின்னணி கொண்ட பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

தமிழில் உருவாகும் வரலாற்று பின்னணி கொண்ட பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

இந்திய வம்சாவளியில் பிறந்திருந்தாலும், அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். பாலிவுட்டில் கால்பதித்த சன்னிலியோனுக்கு கவர்ச்சி ஏரியா கைகொடுத்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சன்னிலியோன். தமிழில் ஜெய் நடித வடகறி படத்தில் சன்னிலியோனுக்காகவே ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. அதற்கு அவரே நடனமாடி ரசிகர்களை கிரங்கடித்திருந்தார்.

வடமாநிலங்களில் சன்னிலியோன் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பவே அவர் தென்னிந்திய திரையுலகப் பக்கம் பயணிக்க தொடங்கியுள்ளார். சரித்திர பின்னணி கொண்ட வீரமா தேவி என்ற படத்தில் பல எதிர்ப்புகளையும் தாண்டி நடித்துவரும் சன்னிலியோன் புதிய படங்களையும் ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்தவகையில் சிந்தனை செய் படத்தின் இயக்குனர் யுவன் இயக்கும் “ஓ மை ஹோஸ்ட்” என்ற படத்தில் சன்னிலியோன் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியுடன் காமெடி பேய் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னிலியோனுக்கு ஜோடியாக காமெடி நடிகர் சதீஷ் நடித்துவருகிறார்.

படப்பிடிப்பின் போது சன்னிலியோனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள சதீஷ், திரைத்துறையில் சன்னியை போல யாரும் கிடையாது என்று புகழ்பாடியிருக்கிறார். சிறந்த நடிகை, அற்புதமானவர், மனிதநேயம் கொண்டவர் என புகழ்பாடி சன்னிலியோனையே வெட்கப்படவைத்திருக்கிறார் நடிகர் சதீஷ். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!