தல, தளபதி எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அடங்காத ரசிகர்கள்… விஜயின் குடும்ப பிரச்சினையை டிரெண்டாக்கி உற்சாகம்!

Published : Oct 05, 2021, 02:26 PM IST
தல, தளபதி எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அடங்காத ரசிகர்கள்… விஜயின் குடும்ப பிரச்சினையை டிரெண்டாக்கி உற்சாகம்!

சுருக்கம்

நடிகர் அஜித் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழு… வாழ விடு.. என்ற கொள்கையுடன் இருப்பவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்கள் தம் பின்னால் வந்து நேரத்தை வீணடிக்காமல் அவர்களது சொந்த பிரச்சினைக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர். ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், தமது ரசிகர்கள் மீதான அன்பை அவர் எப்போதும் குறைத்துக்கொண்டதில்லை. தம் ரசிகர்கள், மற்றும் நலம் விரும்பிகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் நன்றி கூறி வருகிறார்.

திரைத்துறையில் தம்மை யாருக்கும் போட்டியாக நினைக்காத தல அஜித், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், வலைதளங்களில் தமது ரசிகர்கள், பிற நடிகர்கள் அவர்களின் குடும்பங்களை விமர்சிக்கக் கூடாது என்று அடிக்கடி அறிவுரை கூறியிருக்கிறார். தம் மீதான அன்பு என்று கூறி வலிமை அப்டேட்டுக்காக ரசிகர்கள் செய்த பல செயல்கள் அஜித்தையே கோபமாக அறிக்கை வெளியிடவைத்தது.

அதேபோல் தளபதி விஜயும், தமது ரசிகர்கள் எந்த நடிகர்களின் குடும்ப பிரச்சினைகளையும் விமர்சிக்க கூடாது என்று அறிவுரை கூறி வருகிறார். ஆனால் தல, தளபதியின் அறிவுரைகளை காற்றில் பறக்க விட்டு டுவிட்டரில் மீண்டும் யுத்தத்தை தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். நேற்றைய தினம் நடிகர் அஜித் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்று போலீஸாரால் காப்பாற்றப்பட்டார். அஜித் மருத்துவமனை சென்றபோது அவரை செல்போனில் படம்பிடித்ததற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட அப்பெண், தமக்கு அஜித் நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அபத்தமான காரணங்களை கூறியுள்ளார்.

இந்தநிலையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற செய்தியை பகிர்ந்து வாழ விடுங்கள் அஜித் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க, அஜித் ரசிகர்கள் விஜயின் குடும்ப பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். விஜய்-க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சி.-க்கும் இடையே சில நாட்களாக பிரச்சினை இருந்துவருகிறது. சில மாதங்களாக விஜய் தம்மிடம் பேசுவதில்லை என்று எஸ்.ஏ.சி. கூறியதை குறிப்பிட்டு பெத்தவர்கிட்ட பேசுங்க விஜய் என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்டக்கி வருகிறனர். தல, தளபதி ரசிகர்களின் இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!