ஒரு வேலை சாப்பாடுதான்... போட்டுக்க துணி கூட இருக்காது..!! போட்டியாளர்களை கலங்க வைத்த இசைவாணி..!!

Published : Oct 05, 2021, 10:54 AM ISTUpdated : Oct 05, 2021, 10:57 AM IST
ஒரு வேலை சாப்பாடுதான்... போட்டுக்க துணி கூட இருக்காது..!! போட்டியாளர்களை கலங்க வைத்த இசைவாணி..!!

சுருக்கம்

பிக்பாஸ் போட்டி (Biggboss 5) அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய நிலையில், இனி வரும் நாட்களில் என்னென்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று, போட்டியாளர்களை கண் கலங்க வைத்துள்ளார் இசை வாணி (Isai Vani) இதுகுறித்த புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

பிக்பாஸ் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய நிலையில், இனி வரும் நாட்களில் என்னென்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று, போட்டியாளர்களை கண் கலங்க வைத்துள்ளார் இசை வாணி இதுகுறித்த புரோமோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! யார்..? எதற்காக..? வெளியான பரபரப்பு காரணம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் எப்போதுமே நன்றாக தான் இருக்கும். அது போல் நேற்றைய தினத்தை மிகவும் சந்தோஷமா கழித்தனர் போட்டியாளர்கள். குறிப்பாக இந்த முறை ஒரு தலைவரை தேர்வு செய்யாமல், ஒவ்வொரு வேலை செய்யும் அணிக்கும் தனி தனி தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பாத்ரூம் கழுவும் அணிக்கு ராஜு ஜெயமோகன் தலைவராக உள்ளார். நமீதா வெசல் வாஷிங் அணிக்கு தலைவரானார். சின்ன பொண்ணு சமையல் அணிக்கும், பவானி ரெட்டி வீடு சுத்தம் செய்யும் அணிக்கும் என நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இது இந்த ஒரு வாரம் மட்டுமா? அல்லது தொடர்ந்து இந்த நான்கு தலைவர்கள் தொடர்வார்களா... என்பது பலரது மனதிலும் ஒரு கேள்வி உள்ளது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் பெண் போட்டியாளர்கள் பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, சுற்றிவருவது பிக்பாஸ் வீட்டை அலங்கரித்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் செய்திகள்: 16 வயசு தான்... ஆனால் போஸ் கொடுப்பது ஹீரோயின் போல்! முட்டிக்கு மேல் உடை அனிகா வெளியிட்ட போட்டோஸ்..!

 

இன்றைய தினம் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை மற்றும் தங்கள் வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி கூறுகிறார்கள். அதில் இசை வாணி பேசிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் "தன்னுடைய தந்தை ஹார்பரில் வேலை செய்ததாகவும், அவருக்கு வேலை போன பின்பு காசு இல்லை. வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை காலி செய்யுங்கள் என கூறினார்கள். அப்போதைக்கு ஒரு வேலை சாப்பாடுதான். அதையும் நான் சாப்பிட வேண்டும் என தன்னுடைய தந்தை சாப்பிட மாட்டார். போட்டுக்கொள்ள டிரஸ் கூட இருக்காது என, அங்கிருந்த அனைவருமே ஒரு நிமிடம் கண் கலங்க வைத்து விட்டனர். எனினும் யாருடைய வாழ்க்கையும் இப்படியே சென்று விடாது கண்டிப்பாக மாற்றம் வரும் என்கிற கருத்தை கூற இந்த புரோமோ முடிவடைகிறது.

அந்த புரோமோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு
மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்