கனவில் கூட நினைக்கவில்லை 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் குறித்து ரஜினிகாந்த் போட்ட ட்விட்..!

Published : Oct 04, 2021, 06:59 PM IST
கனவில் கூட நினைக்கவில்லை 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் குறித்து ரஜினிகாந்த் போட்ட ட்விட்..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, (SPB ) கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள பாடல் சற்று முன்னர் வெளியான நிலையில் ரஜினிகாந்த் எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, (SPB ) கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள பாடல் சற்று முன்னர் வெளியான நிலையில் ரஜினிகாந்த் எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: 16 வயசு தான்... ஆனால் போஸ் கொடுப்பது ஹீரோயின் போல்! முட்டிக்கு மேல் உடை அனிகா வெளியிட்ட போட்டோஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் வெளியானது.

இந்த படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை பாடியுள்ள பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 ஆம் தேதி  காலமானார். இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'அண்ணாத்த' படத்தின் ஆரம்ப பாடலை எஸ்.பி.பி தன்னுடைய இசையில் பாடியுள்ளார் என்று இமான் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கும் சித்தார்த் பதிவு! சமந்தாவை குறிவைத்து போட்டாரா?

 

எனவே இந்த அண்ணாத்த'  திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்த நிலையில், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக, அதிரடி சரவெடியாக 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் தற்போது வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட்  புரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்: சமந்தா - நயசைத்தன்யா பிரிவு குறித்து... கனத்த இதயத்துடன் நாகர்ஜுனா வெளியிட்ட உருக்கமான தகவல்..!

 

வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினகாந்துடன் இணைந்து, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சற்று முன்னர் வெளியான இந்த பாடல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில், "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்". என தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு
மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்