நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில பிரபலங்கள் வாக்களிக்க கூடிய, ஸ்டெல்லா மேரில் கல்லூரியில், வாக்கு பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே... நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
இன்று காலை முதலே தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற பொதுமக்கள், பிரபலங்கள், மற்றும் அரசியல் வாதிகள் பலர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித் 6.45 மணிக்கே திருவான்மியூர் வாக்கு சாவடிக்கு வந்து, வாக்களித்தார். இவரை தொடர்ந்து, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
undefined
அடுத்தடுத்து பிரபலங்களும் அரசியல்வாதிகளும்... பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் வாக்குப்பதிவு திடீர் நிறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் வாக்களிக்க உள்ள ஸ்டெல்லா மெரில் கல்லூரியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாகவும், அதிகாரிகள் வாக்கு செலுத்த உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்த பின்னரே மீண்டும் வாக்கு பதிவு துவங்கியது என கூறப்படுகிறது. எனவே நடிகர் கெளதம் கார்த்திக், கார்த்திக் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.