ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்த வரும் 'விழித்தெழு '..!

Published : Dec 08, 2022, 11:29 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்த வரும் 'விழித்தெழு '..!

சுருக்கம்

தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. என்பதை சுட்டி காட்டும் விதமாக தயாராகி வருகிறது விழித்தெழு திரைப்படம்.

நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள்  பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.

இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள் .அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழகஅரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'விழித்தெழு'.

முகமெல்லாம் ஒட்டி போய் இப்படி ஆகிட்டாரே நயன்தாரா? என்ன ஆச்சு... புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில்  உருவாகும் இந்தத் திரைப்படத்தை சி எம். துரை ஆனந்த்  தயாரித்துள்ளார்.  சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட. இன்றைய சூழலில் அனைவரது வாழ்க்கையிலும் இணையதள மோசடியை  அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் .அதைத் தட்டிக் கேட்கும் விதமாக விழித்தெழு படம்  உருவாகியுள்ளது.

  திரைப்பட இயக்குநர் தமிழ்செல்வன் தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லும்போதே தயாரிப்பாளர் "மிகவும் அருமையான கதை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கதை என்று உடனே படப்பிடிப்பு நடத்தி படத்தை எடுத்து உடனே ரிலீஸ் செய்ய வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். சொன்னபடியே மும்முரமாக களத்தில் இறங்கியும் உள்ளார்.

 மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படபிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ , பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு,  சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக்,மற்றும் பலர் நடித்துள்ளனர் .

Alya Manasa: விஜய் டிவியில் இருந்து... சன் டிவிக்கு தாவியதும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய ஆல்யா மானசா!

இப்படத்தில் தயாரிப்பாளர் சிஎம். துரை ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார். படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார். படத்தின் எடிட்டிங் எஸ் ஆர் முத்துக்குமார்,  ஸ்டண்ட் எஸ் ஆர் ஹரிமுருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேச வந்திருக்கும் இந்தப் படம் காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!