டாஸ்மாக்கில் சரக்கு வாங்க நின்றவர்களை அடித்து விரட்டிய விஷால்... தெறித்தோடிய குடிமகன்கள் - வைரல் வீடியோ

By Ganesh A  |  First Published Jan 17, 2024, 8:19 PM IST

நடிகர் விஷால், டாஸ்மாக்கில் சரக்கு வாங்க நின்ற குடிமகன்களை அடித்து விரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. நடிகர் விஷாலின் கெரியரில் முதன்முறையாக ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் என்கிற சாதனையையும் மார்க் ஆண்டனி படைத்தது.

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் ஹிட் அடித்த நிலையில், தற்போது ரத்னம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க இருவரும் இணைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... 'புஷ்பா 2' படத்தில் சமந்தாவுக்கு பதில் ஐட்டம் டான்ஸ் ஆடும் 22 வயது இளம் நடிகை! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், ரத்னம் படத்தின் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. ரத்னம் படத்திற்காக டாஸ்மாக் கடை போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

அது உண்மையான டாஸ்மாக் என நினைத்து குடிமகன்கள் கியூவில் மதுவாங்க நின்றுள்ளனர். இதைப்பார்த்த நடிகர் விஷால், அங்கு குடிபோதையில் மது வாங்க நின்ற ஒருவரை பிடித்து இது ரத்னம் படத்துக்காக போட்ட செட்டு டா என சொல்லி அடித்து விரட்டி அடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..

click me!