இந்தியன் 2, விடாமுயற்சி, தங்கலான் என 2024-ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்!

Published : Jan 17, 2024, 04:55 PM ISTUpdated : Jan 17, 2024, 05:00 PM IST
இந்தியன் 2, விடாமுயற்சி, தங்கலான் என 2024-ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்!

சுருக்கம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.  

பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். 

இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 

உண்மையா? உருட்டா.. சங்கூத வந்த சாமியார் மீது இறங்கிய விஜயகாந்த் ஆவி! பிரேமலதாவை பார்த்து சொன்ன வார்த்தை!

நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் விபி மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, "பொங்கல் பண்டிகை நாளில் மேலும் உற்சாகமூட்டுவதற்காக தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்கள் அதன் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

கடந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆன 'லியோ', 'துணிவு', 'மாமன்னன்' போன்ற படங்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  நெட்ஃபிலிக்ஸின் 50% வளர்ச்சி தென்னிந்திய கண்டென்களில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த வருடம் இந்தப் புதிய படங்களின் வரவு எங்கள் நெட்ஃபிலிக்ஸ் உறுப்பினர்களை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும்" என்றார்.

Pongal 2024: 47 வயதில் காதல் மனைவி சங்கீதாவுடன் தல பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி.! வைரலாகும் போட்டோஸ்!

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்:

*லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்),

 *ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்),

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கன்னிவெடி' (தெலுங்கு, மலையாளம், கன்னடம்), 

*பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'மஹாராஜா' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 

*பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி, தி ரூட் தயாரிப்பில் 'ரிவால்வர் ரீட்டா' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம்), 

*சோனி ஃபிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்  தயாரித்திருக்கும் 'சிவகார்த்திகேயன் 21' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 

*எஸ்என்எஸ் புரொடக்சன்ஸ் எல்எல்பி தயாரித்திருக்கும் 'சொர்க்கவாசல்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 

*ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியாகும் 'தங்கலான்' ( தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), 

*லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 'இந்தியன்2' (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) ஆகியவை. இது மட்டும் இன்றி, இன்னும் பல பெரியப்படங்களை கைப்பற்றுவதற்கான பேச்சு வார்த்தையிலும் நெட்ஃபிலிக்ஸ் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்