
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஷால் தனது 34-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயகுனர் ஹரி இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் 34 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது படக்குழுவினர் திருச்சியில் நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் விஷால் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி தினமான நேற்றும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு நடிகர் விஷால் சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விஷால் ஏற்பாடு செய்திருந்த சமபந்தி கறி விருந்தில் ஊழியர்கள் அனைவருடனும் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கறி விருந்தை சுவைத்தனர். உணவு அருந்தும் முன்னர் நடிகர் விஷால் மூன்று மதக் கடவுளையும் பிரார்த்தனை செய்து அதன்பின்னரே சாப்பிட்டார். நடிகர் விஷால் அளித்த சமபந்தி கறி விருந்து குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷாலின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் மூன்றவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், விஷால் 34 படம் மூலம் இருவரும் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் புஸ்வானமான ஜப்பான்... சரவெடியாக வெடிக்கும் ஜிகர்தண்டா - தீபாவளி ரிலீஸ் படங்களின் வசூல் நிலவரம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.