ப்பா என்ன மனுஷன்யா... போலீஸ்காரர்களுக்கு அஜித் கொடுத்த மரியாதையை பார்த்து அசந்து போன ரசிகர்கள் - வைரல் வீடியோ

Published : Jul 24, 2022, 01:31 PM IST
ப்பா என்ன மனுஷன்யா... போலீஸ்காரர்களுக்கு அஜித் கொடுத்த மரியாதையை பார்த்து அசந்து போன ரசிகர்கள் - வைரல் வீடியோ

சுருக்கம்

Ajith : சென்னையில் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, ஏகே 61 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் செல்ல இன்று விமான நிலையம் வந்த அஜித்தின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், வீரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

ஏகே 61 படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் தயாராகும் மூன்றாவது படம் தான் ஏகே 61. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படியுங்கள்... மாணவர்களின் ஓராண்டு கல்வி கட்டணத்தைச் வழங்கிய ‘ஆஹா’வும், ‘மாமனிதன்’ விஜய் சேதுபதியும்!

நடிகர் அஜித் கடந்த மாதம் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சில நாட்கள் பைக் ட்ரிப் சென்ற இவர், பல்வேறு இடங்களை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்று சுற்றிப்பார்த்தார். சுமார் ஒரு மாத சுற்றுலாவுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார் அஜித். 

சென்னையில் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, ஏகே 61 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் செல்ல இன்று விமான நிலையம் வந்த அஜித், அங்கு காரில் வந்திறங்கியதும், அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு கைகொடுத்ததோடு மட்டுமின்றி அவர்களை பார்த்து சல்யூட்டும் அடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ச்ச என்ன மனுஷன்யா என வியந்து பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!