உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சிறந்த விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இந்த திரைப்படம் தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்பட உள்ளதாக அதிகார பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.
மேலும் செய்திகள்: சைஃப் அலிகானுக்கு வந்த சோதனை..? 'ஆதிபுருஷ்' ராவணன் தோற்றத்தை தாறுமாறாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியானது. உலகம் முழுக்கப் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட யூ.கே எனப்படும் ஐரோப்பியப் பகுதியில் 2022ல் வெளியான இந்தியத் திரைப்படங்களிலேயே விக்ரம்தான் பெருவெற்றி பெற்றது.
மேலும் செய்திகள்: மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா ஐஸ்வர்யா ராய்? வயிற்றில் கைவைத்தபடி போஸ்.. சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி திரு. நாராயணன், "உலகெங்கிலும் விக்ரம் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. பூஸான் சர்வதேசத் திரைப்பட விழா இந்தத் திரைப்படத்தின் கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு வைரக் கல், இந்தத் தேர்வு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படும் பல அற்புதமான திரைப்படங்களுடன் எங்கள் படமும் திரையிடப்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது, ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.