குட்டை டவுசரும்..மேல் கோட்டுமாய் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி....

Published : Oct 03, 2022, 07:21 PM ISTUpdated : Oct 03, 2022, 07:58 PM IST
குட்டை டவுசரும்..மேல் கோட்டுமாய் பட்டையை கிளப்பும் திவ்யபாரதி....

சுருக்கம்

தற்போது குட்டை டவுசரும் மேல் கோட்டுமாக திவ்யபாரதி கொடுத்துள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

தமிழில் ஒரு படத்தில் மட்டும் தோன்றியிருந்தாலும் தனது புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் திவ்யபாரதி. ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பேச்சுலர் படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார். இவரது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பெற்று விட்டார். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று இருந்தது. 

முதல் படம் வெளியாகும் முன்னரே தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்துவிட்ட கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் திவ்யபாரதி, பேச்சிலரை அடுத்து மதில் மேல் காதல், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள படத்தில் என அடுத்து  ஒப்பந்தமானார்.

இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின்ராவ் தான் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் துவங்க உள்ள இந்த படத்தின் பின்னணி பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் காதல் படத்தில் தமிழ் ரீமேக்கிலும் இவர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் நாயகன் கதிருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார்.

இதை தவிர சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரிலும் ஆரிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோலிவுட்டில்  பிஸியான நடிகையாக மாறிவிட்ட இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் பாலோவர்ஸ் அதிகம் என்பதால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இன்ஸ்டாகிராம் மூலமாகவே இவருக்கு ரசிகர் பட்டாளமும்  உண்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முன்னதாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு நீச்சல் உடை அணிந்தபடி அவர் கொடுத்திருந்த போட்டோக்களும் வீடியோக்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தி வந்தது. தற்போது குட்டை டவுசரும் மேல் கோட்டுமாக இவர் கொடுத்துள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!