நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின், டீசர் நேற்று வெளியான நிலையில்... இதில் ராவணனாக நடித்துள்ள சைஃப் அலிகான் தோற்றம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
'பாகுபலி' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மீண்டும் நடித்து வரும் வரலாற்று சிறப்பு கொண்ட திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், பிரபாஸ் ஸ்ரீ ராமராக நடித்துள்ளார். சீதையாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் மற்றும் ராவணனாக பாலிவுட் நடிகை சைஃப் அலிகானும் நடித்துள்ளனர்.
இது ஸ்ரீ ராமர் பற்றிய கதை என்பதால், இந்த படத்தின் டீசரை கூட... படக்குழு நேற்று அயோத்தியில் வைத்து வெளியிட்டது. 3டி தொழில்நுட்பத்தில், பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி... ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், சிலர் குழந்தைகள் பாக்கும் பொம்மை படம் போல் உள்ளது என விமர்சித்தனர்.
மேலும் செய்திகள்: இயற்க்கை பூங்காவை போல் படு பிரமாண்டமாக தயாராகி இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 வீடு..! வைரலாகும் புகைப்படம்!
ஆனால் இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்திற்கு பிரபாஸ் மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும், ஆனால் இந்த படத்தில், ராவணனாக நடித்துள்ள சைஃப் அலிகானின் தோற்றத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. நெட்டிசன்கள் பலர், சைஃப் அலிகான் பார்ப்பதற்கு பாபர் போலவும், அவுரங்கசீப் போலவும் அவரது மகன் தைமூர் போலவும் தான் காட்சியளிக்கிறாரே தவிர, ராவணன் போல் சுத்தமாக இல்லை என கூறி வருகிறார்கள். இவர் ராவணன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை என்பது போன்ற கருத்துக்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில காட்சிகள் மட்டுமே டீசரில் இடம்பெற்றுள்ளதால், படம் வெளியான பிறகே... இவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் செய்திகள்: ஒரே நேரத்தில் அஜித்தின் 'துணிவு' படத்தில் இணைந்த 3 பிக்பாஸ் பிரபலங்கள் ! வைரலாகும் புகைப்படம்!
பல பாலிவுட் படங்களில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய இவரே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது இந்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த படத்தை, பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.