என் அப்பா கிடைச்சிட்டாரு! ஊடகங்களுக்கு நன்றி சொன்ன கூல் சுரேஷ்

By Kanmani PFirst Published Oct 3, 2022, 6:05 PM IST
Highlights

 இந்நிலையில் மறுநாள் காலையில் தனது தந்தையை ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். அதற்கு ஊடக நண்பர்கள் தான் காரணம் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார் கூல் சுரேஷ். 

சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ். இவர் வெந்து தணிந்தது காடு படம் அறிவிக்கப்பட்ட பிறகு மிகவும் பிஸியாகிவிட்டார். எந்த பேட்டி கொடுத்தாலும் சிம்பு படத்தின் பெயரை சொல்லியே பேசி வந்தார். இவரின் கலோக்கி ஸ்டைல் பேச்சும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டது. இதனால் சோசியல் மீடியாவில் இவர் மிக பிரபலமாகி விட்டார்.

முன்னதாக தமிழ் திரையுலகில் சின்ன சின்ன  வேடத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சாக்லேட், காக்க காக்க, அலை, ஆயுத எழுத்து, குசேலன், படிக்காதவன், கந்தகோட்டை, சிங்கம்புலி, காதல் பிசாசு, வெள்ளைக்கார துரை,  கிச்சு கிச்சு, மைடியர் லிசா உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக எந்த வாய்ப்பும் இன்றி இருந்த இவர் ஓயாமல் சிம்பு புராணம் பாடி வந்தார். அதோடு படங்கள் குறித்தும் விமர்சனங்களை தனக்கே உரித்தான ஸ்டைலில் கூறி வந்தார். இதனால் இவர் அறிமுகம் அதிகமாகவே கிடைத்தது. யூட்யூப்களில் அடிக்கடி இவர் வந்து போவதால் ட்ரெண்டாக ஆரம்பித்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகி விட்ட இவர்,  வெந்து தணிந்தது காடு படம்ரிலீஸுக்கு பிறகு மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். படத்திற்கு ப்ரோமோஷன் செய்வதாக கூறப்பட்டார். இதனால் மனம் நொந்த சுரேஷ் கண்ணீர் மல்க தனக்கு சொந்த வீடு கூட கிடையாது என கூறியிருந்தார். பின்னர் அவரை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இவருக்கு ஐ போன் பரிசாக வழங்கியதுடன், பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு உதவுவதாக கூறினார். 

இதற்கிடையே சமீபத்தில் தனது தந்தையை காணவில்லை என கூறியிருந்தார். இதையடுத்து அவரின் பதிவு சோசியல் மீடியா, செய்தி ஊடகம் என அனைத்திலும் பரவியது.  இந்நிலையில் மறுநாள் காலையில் தனது தந்தையை ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். அதற்கு ஊடக நண்பர்கள் தான் காரணம் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார் கூல் சுரேஷ். 

click me!