
பொதுவாக கணவர் நல்ல வேலையில் இருந்தால், சில பெண்கள் நிறைய படித்திருந்தாலும் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பது தான் வழக்கம். கணவர் கோடி கணக்கில் சம்பாதித்தால் சொல்லவா வேண்டும். ஆனால் நடிகர் விக்ரமின் மனைவி சற்று வித்தியாசமானவராக உள்ளார்.
நடிகர் விக்ரம்:
நடிகர் விக்ரம் எப்படி ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பாமல் தன்னுடைய நடிப்பில் வித்தியாசம் காட்டி உடலை வருத்தி, ரசிகர்களை மகிழ்விக்கிராரோ அதே போல் இவருடைய மனைவி மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றான போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதில் இருந்து மீட்கும் புனிதமான வேலையை செய்து வருகிறார்.
விக்ரம் மனைவி சைலஜா:
நடிகர் விக்ரமை பற்றி தெரிந்த அளவிற்கு, அவருடைய மனைவி சைலஜாவை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரம் மற்றும் சைலஜாவிற்கு, அக்ஷிதா என்கிற மகளும் துருவ் என்கிற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் தான் அக்ஷிதாவிற்க்கு மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
தற்போது துருவ் அமெரிக்காவில் சினிமா பற்றிய பட்டப்படிப்பை முடித்து விட்டு, இயக்குனர் பாலா இயக்க உள்ள தெலுங்கு ரீமேக் திரைப்படமான, அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
ஆசிரியராக சைலஜா:
இந்த நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்து சின்ன தகவல் சமூக வலைதளத்தில் தற்போது உலா வருகிறது. விக்ரமின் மனைவி சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். போதை பொருட்களுக்கு அடிமையாகும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம். இவருடைய இந்த செயல் விக்ரம் ரசிகர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.