கரு கரு முடியில் தல அஜித்..... வைரலாகும் புகைப்படம்

First Published Jan 23, 2018, 7:29 PM IST
Highlights
ajith new look vairal photo


இதுவரை சால்ட் அண்ட் பேப்பர் தலையிலேயே நடித்து வந்த அஜித், தான் நடிக்கப் போகும் "விசுவாசம்" படத்திற்காக கரு கரு முடியுடன் இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

சிவாவுடன் கூட்டணி

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சிவாவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி வைத்துள்ளார்.
அஜித், இயக்குனர் சிவாவுடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு "விசுவாசம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 



சென்டிமென்ட்

வீரம், வேதாளம், படங்கள் அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களிடையையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சென்டிமென்டாக மீண்டும் அஜித், சிவாவுடன் இணைந்து படம் பண்ண வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் அஜித் ரசிகர்கள். ஆனாலும் மீண்டும் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் அஜித். இந்த விசுவாசம் படம் வெற்றியடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.



வைரலாகும் புதிய லுக்

இந்நிலையில் அஜித்தின் விசுவாசம் படத்தின் அவரின் புதிய லுக் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அஜித் அந்த புகைப்படத்தில் காட்சி அளிக்கிறார். இருப்பினும் படப்பிடிப்பின் போது அதுவும் கருமையாகிவிடும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



விசுவாசம் படத்தின் அப்டேட்

கூடுதல் சிறப்பு செய்தியாக விசுவாசம் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெகு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!