பழம்பெரும் நடிகை சாவித்திரியை காப்பி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்.... என்ன செய்தார் தெரியுமா?

 
Published : Jan 23, 2018, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
பழம்பெரும் நடிகை சாவித்திரியை காப்பி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்.... என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

keerthi suresh give the gold coins

தமிழில் அறிமுகம்

மலையாளத்தில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியானெட் விருதை வாங்கினார். அதன்பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடித்த ”இது என்ன மாயம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.

முன்னணி நடிகை

அதன்பிறகு ”ரஜினி முருகன்”, ”தொடரி”, ”பைரவா”, ”ரெமோ”, ”தானா சேர்ந்த கூட்டம்” என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சாமி2,  சண்டக்கோழி2 , நடிகையர் திலகம் என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.  

தெலுங்கிலும் முன்னணி

 

அண்மையில் இவர் தெலுங்கில் நடித்த ”நேனு ஷைலஜா” படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பவன் கல்யாணுடன் நடித்த ”அஞ்சாதவாசி” படமும் தமிழில் சூர்யாவுடன் நடித்த ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் தெலுங்கு பதிப்பான ”கேங்” படமும் நல்ல ஹிட் ஆனதால், தெலுங்கு ரசிகர்களிடையே கீர்த்திக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.  இதைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இது தமிழில் ”நடிகையர் திலகம்” என்ற பெயரில் தெலுங்கில் ”மகாநடி” என்ற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது தெலுங்கில் மகாநடி ஹிட் ஆனால் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கிறார் கீர்த்தி.

 

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு

 

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்வப்ன சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் வேடத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். பத்திரிக்கையாளராக சமந்தாவும், அவருக்கு ஜோடியாக தெலுங்கு அர்ஜுன் ரெட்டி புகழ், விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். விஜயா வாகினி அதிபர் சக்ரபாணியாக, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

தங்கக்காசுகள் பரிசு

 

மறைந்த நடிகை சாவித்திரி தன்னுடன் நடிப்பவர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக கொடுப்பாராம். தற்போது அதுபோலவே நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து வரும் கீர்த்தி சாவித்திரியை போன்றே  தன்னுடன் நடித்து வருவபவர்களுக்கு தங்கக் காசுகளை கொடுத்து வருகிறாராம். இதனால் கீர்த்தியிடம் தங்கக்காசுகளை பெற்றவர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?