விபத்தில் சிக்கினாரா நடிகர் ஆதி..?

 
Published : Jan 23, 2018, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
விபத்தில் சிக்கினாரா நடிகர் ஆதி..?

சுருக்கம்

shocking actor adhi met with an accident?

நடிகர் ஆதி தான் நடித்த முதல் தமிழ் படமான 'மிருகம்' படத்திலேயே சிறந்த நடிகர் என பெயர் பெற்றவர். இவரது எதார்த்தமான நடிப்பை பார்த்து பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம். 

ஆதியை அழகிய ஹீரோவாக ரசிக்க வைத்தப்படம் 'ஈரம்' இதை தொடர்ந்து இவர் நடித்த அய்யனார், ஆடுபுலி, அரவான் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'மரகதநாணயம்' திரைப்படம் வெற்றி பெற்றது.  தெலுங்கில் இவர் கேரக்டர் ரோல்களில் நடித்த நின்னுகோரி, மற்றும் அஞ்ஞாதவாசி ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

இந்நிலையில், நடிகர் ஆதி கார் விபத்தில் சிக்கியதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனக்கு எந்த விபத்தும் நேரவில்லை. என்னைப்பற்றி வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை என்று தெரிவித்தார்'.

இதனால் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள ஆதி, அடுத்த படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?