
ஒரு படத்திற்காக எப்படி உழைக்க வேண்டும் என்பதை நடிகர் விக்ரமிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு பொறுப்புணர்ச்சியோடு அவரது கதாபாத்திரத்தில் நடிப்பார் விக்ரம்.
தற்போது இவரது மகன் துருவ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் வெறித்தனமான தன்னுடைய நடிப்பை விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்தி இருப்பார். மேலும் படத்தில் முதல் பகுதியில் மட்டும் ஹீரோயினுக்கு 19 லிப் டு லிப் கிஸ் கொடுத்திருப்பார்.
இந்தப் படத்தின் ரீமேக்கில் துருவ் நடிக்க உள்ளதால், காதல் கதையான இந்தப் படத்தின் ஸ்வாரஸ்யம் குறையாமல் இருக்க கண்டிப்பாக இவர் இந்தப் படத்தில் நடிக்கும் நாயகிக்கு பல லிப் டு லிப் கிஸ் கொடுக்கவேண்டி வரும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.