மீண்டும் ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'சோலோ'

Asianet News Tamil  
Published : Oct 14, 2017, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மீண்டும் ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'சோலோ'

சுருக்கம்

dhulkar salman solo movie re relese

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் குறைந்தது நான்கு திரைப்படங்களாவது  திரைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு  சில படங்களே மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடும்.

இந்நிலையில் வாயை மூடிப் பேசவும் படத்தில் அறிமுகம் கொடுத்த நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் 'சோலோ'.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் 'சோலோ' படத்தைப்  பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்தச் செய்தி மக்களிடையே பரவி இப்படத்தைக் காணும் ஆர்வம் அதிகரித்தது.  

தற்போது மீண்டும்  இன்று முதல் 'சோலோ' படம்  தமிழ்நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ  ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தைக் காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு  இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ