
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து. உலகநாயகன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ் பிக் பாஸ் டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருசிலர் உச்சகட்ட புகழையும், ஒருசிலர் தங்களது சுயரூபத்தை காட்டி இருக்கும் புகழையும் இழந்துள்ளனர்.
அந்தவகையில், ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஓவியா. இவர் சினிமா நாயகி மட்டுமல்ல பிக் பாஸின் நிஜ நாயகியாக வளம் வந்தார். அதேபோல ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை வைத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி தனது உண்மையான முகத்தை காட்டி ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி, மெரினா பொண்ணு என்று பில்டப் கொடுத்த நிலையில் அந்த பெயரை இழந்தது மட்டுமின்றி அதிகபட்ச நபர்களால் வெறுக்கப்படும் ஒரு நபராக ஜூலி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் ஜூலி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவருக்கு ஓவியா ஆர்மியினர் ஓவியா... ஓவியா... என கரகோஷம் எழுப்பி அவரை விரட்டியடித்து வருகின்றனர்.
மக்களின் வெறுப்பை கண்கூடாக பார்த்த ஜூலி நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை போட்டடுள்ளார். அதில்,
"மன்னித்தாலும் சில
காயங்கள் மறப்பதற்கில்லை..
தண்டித்தாலும் நான்
தாங்கள் போலில்லை ..
தழும்புகளுக்கு
களிம்பு தடவுவதால் எல்லா
வலிகளும் குணமாவப்போவதில்லை.
குணங்களுக்கு
பிரம்பு விலாசுவதால்
எல்லா கணங்களும்
மாறிவிடுவதில்லை..
அறியாமல் தெரியாமல் செய்த தவறுகளை
நீங்கள் மன்னிப்பதற்கு தயாராக இல்லை ..
நான் என் பிழைகளை உணர்ந்து ..
என் குறைகளை அகற்றி
ஒரு மாற்றத்தை நோக்கி இனி
வாழ்க்கையில் பயணிக்க போகிறேன்..
எனக்கும் ஒரு இதயமுண்டு..
அதிலும் கொஞ்சம் ஈரமுண்டு..
மரண தண்டனையை விட வார்த்தைகளால்
ஆயிரத்திற்கு மேலான தடவைகளில் கொலை செய்து விட்டீர்கள்..
நானும் என்னை உணர்ந்து விட்டேன்...
ஒரு சாதாரண பெண் -#இவள் ஜுலி."
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அந்த தொலைக்காட்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஜூலிக்கு ஒரு முக்கிய அறிவுரை செய்தார்.
அது என்னவென்றால் "ஜூலி சில நாட்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் இருந்தால் மக்கள் மறந்துவிடுவது மட்டுமின்றி மன்னித்தும் விடுவார்கள்" என்றும் கூறினார். ஆனால் இந்த அறிவுரையை ஜூலி பின்பற்றுவாரா? இல்லை மீண்டும் தனது சுயரூபத்தை காட்டுவாரா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.