
1964 ம் ஆண்டு வெளிவந்த கர்ணன் திரைப்படம் மீண்டும் படமாகிறது. இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார்.
54 வருடங்களுக்கு முன் தமிழில் வெளிவந்த படம் கர்ணன். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணன் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் மஹாவீர் கர்ணா என்ற பெயரில் 350 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திரைப்படம் உருவாகிறது. இதை நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் இப்படத்தை தயாரிக்கிறது.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற என்னு நிண்டே மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் கர்ணனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஹரி இயக்கத்தில் சாமி2 என விக்ரம் பிஸியாக உள்ளார். மேலும் மஹாவீர் கர்ணாவின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும் 2019 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் கர்ணன் ரசிகர்களுக்கு கசப்பான செய்தியாக மஹாவீர் கர்ணா ஹிந்தியில் மட்டுமே வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.