
திருமணமான 2 ஆவது வாரத்தில் டிடி செய்த காரியம்...! வெளிவந்த பகீர் தகவல்...
பிரபல தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள டிடி கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி,தன் குடும்பநண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் தற்போது விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் டிடி.
இதற்கு பல காரணங்கள் கூறி வந்தாலும்,தற்போது வெளியாகி உள்ள காரணம் பலரையும் அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.
2 வாரத்தில் தாலியை கழட்டிய டிடி
தாலி என்பது புனிதமான ஒன்று...திருமணமான 2 ஆவது வாரத்திலேயே நிகழ்ச்சி நடத்த கிளம்பும் போது, தாலியை கழட்டி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார் டிடி
இதனை அறிந்த ஸ்ரீகாந்த்,மிகவும் மனமுடைந்து கோபப்பட்டு டிடியிடம் இது போன்று செய்ய கூடாது என கண்டிஷன் போட்டு உள்ளார்
ஆனால் அதனை டிடி கேட்க வில்லையாம் அப்போதிருந்தே இருவருக்கும் மனகசப்பு இருந்து வந்துள்ளது.
மேலும் தாலியை கழட்டி வைத்துவிட்டு தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், இனி நிகழ்ச்சி நடத்த செல்ல வேண்டாம் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் டிடியின் வாழ்கையை புரட்டி போட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் மன வேதனை அடைந்துள்ளதாராம்.மேலும் அவரது குடும்பத்தாரும் இவர்கள் இருவரின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று தினம் தினம் மன வேதனை கொள்கிறார்கள் என நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.