விஷாலை வீழ்த்திய சிவா... விஜய்யை தோற்கடித்த சூர்யா... கோலாலம்பூரில் அதகளம் பண்ணும் நட்சத்திர கிரிக்கெட்...

 
Published : Jan 06, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
விஷாலை வீழ்த்திய சிவா... விஜய்யை தோற்கடித்த சூர்யா... கோலாலம்பூரில் அதகளம் பண்ணும் நட்சத்திர கிரிக்கெட்...

சுருக்கம்

celebrities cricket at Natchathira Vizha 2018

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் மற்றும் நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

நட்சத்திர கிரிக்கெட் விழாவின் முதல் போட்டியில் திருச்சியை சொந்த மாவட்டமாக கொண்ட சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி, விஷாலின் மதுரை காளைஸ் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை பெற்றுள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் மற்றும் நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி, சூர்யா, விஷால் நாசர் உள்ளிட்ட முன்னை நடிகர்கள் நேற்று முன்தினம் கோலாலம்பூர் சென்றனர்.

மலேசியாவில் நடந்து வரும் நட்சத்திர விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டுள்ளார். மைதானத்துக்குள் மாஸாக வந்த சூரியாவை ரசிகர்கள் உற்சாகமாக சூர்யா, சூர்யா என்று கரகோஷம் எழுப்பியுள்ளனர். காரில் இருந்தபடியே சூர்யா ரசிகர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டுள்ளார்.



நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட  தமிழ் நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நட்சத்திர கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தற்போது நடிகர்கள் பங்கு பெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. சேலம் சீட்டாஸ், மதுரை காளைஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரைனோஸ், சென்னை சிங்கம்ஸ், கோவை கிங்ஸ், பெனாங்பஞ்சர்ஸ் மற்றும் செலாங்கோர் ஜெயிண்ட்ஸ் ஆகிய எட்டு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

ஆறுக்கு ஆறு என்று நடைபெறும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி, விஷாலின் மதுரை காளைஸ் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை பெற்றுள்ளது. இதையடுத்து, நடந்த 2வது போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி, விஜய் சேதுபதியின் ராம்நாடு ரைனோஸ் அணியை தோற்கடித்துள்ளது.



இதில் ,போட்டி துவங்குவதற்கு முன்னதாக, சூர்யா மைதானத்திற்குள் காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது,  ரசிகர்கள் உற்சாகமாக சூர்யா, சூர்யா என்று கரகோஷம் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரில் இருந்தபடியே சூர்யா ரசிகர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டுள்ளார். சூர்யாவின் கார் மைதானத்திற்குள் வருமுன் நடிகர் விஷால் அவரது காரை வரவேற்றுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?