வோல்ட் பிலிம் கார்னிவலில் 4 விருதுகளை தட்டி தூக்கிய விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'..!

Published : Sep 08, 2022, 04:35 PM IST
வோல்ட் பிலிம் கார்னிவலில் 4 விருதுகளை தட்டி தூக்கிய விஜய் சேதுபதியின்  'மாமனிதன்'..!

சுருக்கம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் வோல்ட் பிலிம் கார்னிவலில் நான்கு விருதுகளை பெற்றுள்ளதாக விஜய் சேதுபதி, தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

விஜய் சேதுபதியை வைத்து, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய, 'மாமனிதன்' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது, பின்னர் ஒருவழியாக பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு கடந்த  ஜூன் மாதம் திரைக்கு வந்தது. விஜய் சேதுபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. 

இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்', 'சூப்பர் டீலக்ஸ்', ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த காயத்திரி 'மாமனிதன்' படத்திலும்  ஜோடியாக நடித்திருந்தார். 'மாமனிதன்' திரைப்படம், ஒரு எளிய மனிதன் தன்னுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என தனியார் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க நினைக்கும் நியாயமான ஆசையை எடுத்து கோரிய திரைப்படமாகும் . இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார்.

மேலும் செய்திகள்: ஓணம் பண்டிகையை கூட... கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கொண்டாடும் சாக்ஷி அகர்வால்! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
 

இந்நிலையில் இந்த படத்தை படக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு விருது விழாவுக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு டோக்கியோ திரைப்பட விருதுகள் விழாவில் கலந்து கொண்டு  தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது 'மாமனிதன்'.  அதே போல் சர்வதேச திரைப்பட விழாவிலும், 'மாமனிதன்' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இதை தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 'வோல்ட் பிலிம் கார்னிவலில்' சுமார் நான்கு விருதுகளை பெற்றுள்ளது 'மாமனிதன்'. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: 40 வயதில்.. ஹீரோயின்களுக்கு நிகராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்திய போட்டோ ஷூட்! மாடர்ன் உடையில் மிரள வைத்த போஸ்!
 

அதன்படி... சிறந்த  திரைப்படம், சிறந்த குடும்ப திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என்கிற நான்கு பிரிவுகளின் கீழ் இந்த படம் விருதுகளை பெற்றுள்ளது. இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அப்பாவை விட வயதில் மூத்த வில்லன் நடிகருக்கு 4-வது மனைவியான அஞ்சு..! ஒரே வருடத்தில் பிறந்தது ஏன்?
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு