தளபதி விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்று தன்னுடைய கட்சியின் பெயரை அதிகார பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, விரைவில் சினிமாவில் இருந்து விலகுவதையும் உறுதி செய்தார். இதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் சிறுவன் ஒருவர் ஏங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படமே இவரின் கடைசி படம் என தெரிகிறது.
நேற்று தன்னுடைய கட்சி பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என்பதை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கையேடு, விஜய் வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய கடைசி படம் பற்றியும்... அரசியலில் கால் பதித்த பின்னர் முழுமையான சினிமாவில் இருந்து விலகுவதையும் உறுதி செய்தார். தமிழ் சினிமாவில் சுமார் 100 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் ஒரு நடிகர் இப்படி ஒரு முடியை எடுத்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தாலும், கண்டிப்பாக விஜயின் அரசியல் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகை செய்யும் என்றும் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் சினிமா விமர்சகர்கள் பலர் ரஜினிகாந்தை போல் 25 வருடங்கள் அரசியலுக்கு வருகிறேன்... வருகிறேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைக்காமல், கமல்ஹாசனை போல் அரசியலில் பார்ட் டைம் ஜாப் பார்க்காமல் விஜய் துணிந்து இப்படி ஒரு முடிவு எடுத்து பாராட்ட தக்கது என கூறப்படுகிறது. விஜயின் அரசியல் என்ட்ரியால் இந்த முறை ஆட்சியை பிடித்த திமுக அடுத்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என பேச்சுகளும் அடிபட்டு வருகிறது.
விஜயின் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவிடம் அப்பாவி தனமாக கேள்விகள் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் விஜய் சினிமாவை விட்டு விலகுவது பல ரசிகர்களால் தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Even Thalapathy's Next Generation
Kids Fans Can't Accept His Decision, way Expressing Emotion And Love Towards our Thalapathy
"ஏன் நடிக்கமாட்டாரு" 🥹❤️pic.twitter.com/6YujJAz1V8