ஒரு பக்கம் கட்சி அறிவிப்பு.. மறுபுறம் GOAT படப்பிடிப்பு.. கொஞ்சம் வளர்ந்த தாடியுடன் தளபதி - வைரல் வீடியோ இதோ!

By Ansgar RFirst Published Feb 2, 2024, 11:57 PM IST
Highlights

GOAT Shooting Spot Video : தளபதி விஜய் அவர்கள் இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், காஞ்சிபுரத்தில் தனது GOAT பட படப்பிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

பல வருட காத்திருப்புக்குப் பிறகு தளபதி விஜய் அவர்கள் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். "தமிழக வெற்றி கழகம்" என்கின்ற அந்த கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அவர்கள் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்சி பணிகளுக்காக விரைவில் திரைப்பட வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற உள்ள விஜய் அவர்கள், இன்று கட்சியின் பெயரை அறிவித்த அதே நேரத்தில், காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் GOAT திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் படம் தான் "தளபதி விஜய் The Greatest of All Time".

Latest Videos

அரசியலில் இறங்கும் விஜய்.. அதற்கு முன் இறுதியாக ஒரு படம்.. தளபதி 69ஐ இயக்கப்போவது யார்? - ஆர்வத்தில் Fans!

இந்த திரைப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர், நடிகைகள் பிரசாந்த், பிரபுதேவா, லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மூத்த தமிழ் நடிகர் மோகன் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 

G.O.A.T 🔥

pic.twitter.com/rvwP0ZT4i3

— Christopher Kanagaraj (@Chrissuccess)

இந்நிலையில் படப்பிடிப்பிலிருந்து அவர் புறப்பட்டபோது அங்கே குழுமியிருந்த தனது ரசிகர்களுக்கு அவர் கையசைத்து சென்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே முழுமையாக ஷேவ் செய்த முகத்தோடு காணப்பட்ட தளபதி விஜய், லேசாக வளர்ந்த தாடியோடு ஒரு முற்றிலும் புதிய லுக்கில் உள்ளது அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

ராயன்.. காத்தவராயன்.. தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் D50 - டைட்டில் இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

click me!