ராயன்.. காத்தவராயன்.. தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் D50 - டைட்டில் இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

Ansgar R |  
Published : Feb 02, 2024, 10:51 PM IST
ராயன்.. காத்தவராயன்.. தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் D50 - டைட்டில் இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

சுருக்கம்

Dhanush 50 Movie : பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 51வது படத்தை பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு தாராவி என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

தமிழ் திரையுலகில் இப்பொழுது நல்ல பல படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பும் இப்பொது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த திரைப்பட பணிகளை முடித்த நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது பட பணிகளை தொடங்கினார். பா. பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்பட படப்பிடிப்பு பணிகளை தனுஷ் அவர்கள் முடித்துள்ளார். 

அரசியலில் இறங்கும் விஜய்.. அதற்கு முன் இறுதியாக ஒரு படம்.. தளபதி 69ஐ இயக்கப்போவது யார்? - ஆர்வத்தில் Fans!

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவருடைய பெயர் என்ன என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த திரைப்படத்தின் பெயர் "ராயன்" என்றும், அந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் "காத்தவராயன்" என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆனால் இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. D50 பணிகளை முடித்துள்ள தனுஷ், தனது 51வது படத்திற்கான பணிகளை ஆந்திர பிரதேசத்தில் தற்போது மேற்கொண்டு வருகிறார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2026 ஆம் ஆண்டையும் தாண்டி அவருடைய படங்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது. 

Vadakkupatti Ramasamy: 'வடக்குப்பட்டி ராமசாமி' சந்தானத்திற்கு கை கொடுத்ததா? காலைவாரியதா? விமர்சனம் இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!