
பீஸ்ட் படத்தின் ட்ரைலர், யோகி பாபு நடித்த கூர்கா படத்தை போல் இருக்கிறது என்று பலர்விமர்சித்து வரும் நிலையில், விஜய் டிவி நடிகர் விஜயை சீண்டும் வகையில் ட்விட் ஒன்றை போட்டு கலாய்த்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணியளவில் வெளிவந்தது.விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பலனாக வெறித்தனமாக வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் Youtubeல் 12 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது.
ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படம்:
தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
பீஸ்ட் திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஷான் டாம் சாக்கோ வில்லனாக களமிறங்கியுள்ளார். மேலும், யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
பீஸ்ட் ட்ரைலர்:
ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து, பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், அதில் விஜயின் என்ட்ரி மாஸாக உள்ளது. அதில், ஸ்பை ஏஜெண்டாக இருக்கும் விஜய் மால் ஒன்றில் அதிரடியாக மக்களை காப்பாற்றுகிறார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தனர.
சன் டிவியை சீண்டும் விஜய் டிவி:
டிரைலரை பார்த்து, நெட்டிசன்கள், இந்த படத்தின் கதை யோகி பாபுவின் படமான கூர்கா படத்தின் காபி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதனால், ஏற்கனவே விஜய் ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய் போட்டுள்ள டுவிட் அவர்களை மேலும் சூடேற்றும் வகையில் உள்ளது. அந்த பதிவில், இந்த படத்தை எத்தன பேருக்கு பிடிக்கும் என்று கேட்டு கூர்கா படத்தின் காட்சியை விஜய் டிவி பதிவு செய்துள்ளது. இது பீஸ்ட் படத்தை கலாய்க்கும் படி இருப்பதாக விஜய் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.