மகளின் தேர்வு மதிப்பெண்ணை பார்த்து தன்னைவிட அதிகம் எடுத்து விட்டால் என சந்தோசப்படுவதற்காகவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் என தெரிவித்தது பலரையும் உணர்ச்சிக்குள்ளாக்கியது.
விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா? நானா? இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் மிகப் பாங்காக நடத்தி வருகிறார். இதன் மூலம் சாமானிய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பல பிரச்சனைகள் அழகாக விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் அதிகம் சம்பாதிக்கும் மனைவி குறைவாக படித்த கணவர்கள் என இரு தரப்பினரை வைத்து விவாதம் நடத்தினார் கோபிநாத். அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோடியின் பேச்சு தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் போது, ஆண்கள் குழுவில் ஒருவர், திருமணத்தின் போது தான் மளிகை கடை வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் மிகவும் நொடிந்து விட்டதாகவும், இதன் காரணமாக தனது மனைவியிடம் இருந்து நகைகளையும் அடமானம் வைத்து இதுவரை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. தான் வணிகத்தில் ஜெயிக்க முடியவில்லை என உருக்கமாக பேசியதோடுஇதனால் தன் மனைவியை வேலைக்கு அனுப்பியதாகவும் அவள் அதிகமாக சம்பாதிப்பதால் தற்போது மனைவியின் பெற்றோர் வீட்டில் தனக்கு மரியாதையே கிடையாது. அவள் சகோதரன் முதல் பாட்டி வரை யாருமே என்னிடம் பேசுவதில்லை. சகோதரி திருமணத்திற்கு கூட ஃபோனில் தான் சொன்னார்கள் வந்தால் வரலாம் என கூறிவிட்டார்கள் என மிக வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு....கணவரின் திருமணம் என தெரியாமல் ...சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..!
அதோடு தனது மகனின் ப்ரோக்ரஸை கூட தான் கையொப்பம் இடுவதில்லை தனது மனைவிதான் சைன் செய்கிறார். மகளும் தன்னை விட்டு ஒதுங்குவது வருத்தமளிப்பதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில் தனது கணவர் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை பார்ப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் தான் அவரிடம் கொடுப்பதில்லை என தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...ஒருபக்க சேலையை சரியவிட்டு..கண்களை கவரும் சர்பேட்டா பரம்பரை நடிகை
பின்னர் அதற்கு பதில் சொன்ன கணவர் தன்னைவிட மகள் அதிக மார்க் எடுப்பதை பார்த்து பூரிப்படையவே அவ்வளவு எடுத்து கொள்வேன் என நெகிழ்ச்சியாக பதிலளித்து கோபிநாத்தை மட்டுமல்ல நேயர்களின் நெஞ்சங்களையும் உருகினார். பின்னர் ஆனந்தமாக இருக்க அறிவோடு இருக்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்த கோபிநாத் இது குறித்து அவரது செல்ல மகளிடம் கேட்டபோது என் தந்தை தோற்கவே இல்லை என் மூலம் ஜெயிப்பார் என அழகாக பேசுயிருந்தார். நெகிழ்ந்து போனதொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சி நடுவிலேயே அந்த நபரை அழைத்து அவருக்கு பரிசும் வழங்கி இருந்தார். இந்த விவாதம் தான் தற்போது சோசியல் மீடியா முழுக்க பரவி இருகிறது.
மேலும் செய்திகளுக்கு...ரஜினி, விஜய்-லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்த தனுஷ்... குவியும் வாழ்த்துக்கள்
ஒரு படிக்காத ஆணின் வருத்தங்களை கொட்டி தீர்த்து அந்த நபர் தான் தற்போது சோசியல் மீடியாவின் ஹீரோவாக வலம் வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது சொந்தங்கள் கணவர் குறித்து விசாரிப்பதாகவும் தற்சமயம் உதவிகரமாக இருப்பதாகவும் அவரது மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தெரிவித்துள்ளார். பொதுவாக ஆண்கள் தனது மனக்கவல்களை வெளியில் தெரிவிப்பது இல்லை. அவ்வாறு மனக்குரல்களை ஆன் மகன் கொட்டித்தீர்த்தால் அது சமூகத்தையே திரும்பி பார்க்க வைக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது என்று கூறலாம். தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வெல்ல வேண்டும் எனும் போராட்டத்தில் அந்த தந்தை தனது மகளின் தேர்வு மதிப்பெண்ணை பார்த்து தன்னைவிட அதிகம் எடுத்து விட்டால் என சந்தோசப்படுவதற்காகவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் என தெரிவித்தது பலரையும் உணர்ச்சிக்குள்ளாக்கியது.