மறைந்த வடிவேல் பாலாஜி குரலில் மிமிக்ரி... கண்ணீர் விட்டு கதறி அழுத விஜய் டி.வி. பிரபலங்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 01, 2020, 04:20 PM IST
மறைந்த வடிவேல் பாலாஜி குரலில் மிமிக்ரி... கண்ணீர் விட்டு கதறி அழுத விஜய் டி.வி. பிரபலங்கள்...!

சுருக்கம்

இந்த ஷோ வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வடிவேல் பாலாஜி குரலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் ஒருவர் வடிவேல் பாலாஜி குரலில் பேசும் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக சினிமா துறை மற்றும் டிவி நட்சத்திரங்கள் பலரும் உருக்கமாக வடிவேல் பாலாஜிக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் டி.வி., ‘மிஸ் யூ வடிவேல் பாலாஜி’என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து விஜய் டி.வி. பிரபலங்கள் பேச உள்ளனர். இதற்கான புரோமோ வீடியோக்களை விஜய் டி.வி. ஒளிபரப்பாகி வருகிறது.

 

இதையும் படிங்க:  “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இந்த ஷோ வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வடிவேல் பாலாஜி குரலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் ஒருவர் வடிவேல் பாலாஜி குரலில் பேசும் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதைக் கேட்ட மாகாபா ஆனந்த், குக்வித் கோமாளி புகழ், டிடி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதா அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!