
நடிகை ராஷ்மிகா, தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடித்து வரும், 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளது. 5 ஆவது கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ளதாலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என தெரிகிறது.
எப்போதும் பிஸியாக சுற்றி கொண்டிருந்த ராஷ்மிகா தற்போது, பட வேலைகள் இல்லாததால் தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.
கன்னடத்தில் நடிகையாக இருந்த போது, பெரிதாக பிரபலமில்லாத நடிகை ராஷ்மிகாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது, இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம் திரைப்படம் தான். இந்த படத்தில் இவருடைய அழகு மற்றும், இவர் விஜய் தேவரகொண்டா போல் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இந்த சூப்பர் ஹிட் ஜோடி, டியர் காம்ரேட் என்கிற படத்திலும் இணைந்து நடித்தனர். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
திரைப்பட ஷூட்டிங் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விடுகிறார் ராஷ்மிகா. மேலும் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டும் இவர், தற்போது குட்டை டவுசர் போட்டு பீச்சில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது...
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.