bharathi kannamma : உண்மையை உடைத்த கண்ணம்மா ...அதிர்ந்து போன வெண்பா..இன்றைய எபிசோட்

Published : Oct 27, 2022, 05:11 PM ISTUpdated : Oct 27, 2022, 05:14 PM IST
bharathi kannamma  : உண்மையை உடைத்த கண்ணம்மா ...அதிர்ந்து போன வெண்பா..இன்றைய எபிசோட்

சுருக்கம்

ஏமாத்திட மாட்ட தானே? என  மிரட்டுகிறார் வெண்பா. இதையடுத்து நான் கட்டாயம் வருவேன் என பாரதி கூற இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. ஒரு பக்கம் பாரதி தனது இரு பிள்ளைகளும் தன்னுடையதா என  அறிந்து கொள்ள டி என் ஏ சாம்பிள் கொடுத்துள்ளார். மறுபக்கம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதியை தந்தையாக முடிவிற்கு சம்மதமும் வாங்கி அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமும் திட்டிவிட்டார் வெண்பா.

இன்றைய எபிசோடில் ரோஹித் - வெண்பா கல்யாணத்திற்காக அனைவரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர். உறவினர்களை ஷர்மிளா வரவேற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது வரும் கண்ணம்மாவையும் ஷர்மிளா வரவேற்கிறார். மண்டபத்திற்குள் இருக்கையில் லட்சுமி குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டதால் கண்ணம்மா அவளை தண்ணீர் குடிக்க கூட்டி செல்கிறார். அப்போது சாந்தி வெண்பாவிடம் கண்ணம்மா பற்றி கூற  இருவரும் கண்ணம்மாவை வெறுப்பேற்றுமாறு பேசிக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...keerthy suresh : கீர்த்தி சுரேஷ் சமீபத்திய ஹாட் லுக் இதோ

அப்போது கண்ணம்மா நான் உன் கல்யாணத்திற்காக வரவில்லை. கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என பார்க்கத்தான் வந்தேன். யாருக்கு தெரியும் கடைசி நேரத்தில் நீ கல்யாணத்தை நிறுத்தலாம். மண்டபத்தை விட்டு எஸ்கேப் ஆகலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதை வேடிக்கை பார்க்க தான் நான் இங்கு வந்தேன் என்று பல்பு கொடுக்கிறார். 

இது ஒரு புறம் அரங்கேற மறுபுறம் டிஎன்ஏ  ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி கிளினிக்கிற்கு  போன்மேல் போன் போட்டு வருகிறார். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் ரிசல்ட் வரவில்லை என்ற பதிலே கிடைக்கிறது. இதனால் மிகவும் அப்செட் ஆக இருக்கிறார். பின்னர் வெண்பாவின் அறைக்கு வரும் ரோஹித் ரொமாண்டிக்காக பேசிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் வெண்பா. ரோஹித் சென்றவுடன் பாரதிக்கு போன் செய்து. நீ கோயிலுக்கு வந்து விட்டாயா? என கேட்க பாரதி இல்லை நான் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறுகிறார். ஏமாத்திட மாட்ட தானே? என  மிரட்டுகிறார் வெண்பா. இதையடுத்து நான் கட்டாயம் வருவேன் என பாரதி கூற இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!