நடிகர் தனுஷ் தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில், நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியானது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான போது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நடிகர் தனுஷ், தற்போது தன்னுடைய திறமையான நடிப்பால் ஹாலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடித்தடுத்து வெற்றி பெற்று வரும் நிலையில், தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான நானே வருவேன் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் தன்னுடைய சகோதரர் செல்வராக இயக்கத்தில் நடித்த இந்த படத்தில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதோடு இயக்குனர் செல்வராகவனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். இந்த படத்தின் கதையை தனுஷ் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். சீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார். பல முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படத்தில் ஹீரோயினாக எல்லி அவ்ராம் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் செய்திகள்: டேஞ்சர் ஜோனில் மூன்று பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?
பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், பொன்னியின் செல்வன் படம் அளவிற்க்கு வசூல் செய்வதில்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்று நியாமான வசூலை பெற்ற படமாக அமைந்தது.
மேலும் செய்திகள்: 2 பீஸ் உடையில்... தோழிகளுடன் சேர்ந்து கவர்ச்சியால் கடற்கரையை சூடேற்றும் இலியானா! தாறு மாறு ஹாட் போட்டோஸ்!
தனுஷின் சைக்கோ கில்லர் படமான இந்த படம் ஓட்டிட்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று ஓடிடியில் ரிலீஸ் செய்தது குறித்து இயக்குனர் செல்வராகவனும் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.