
கனவே கலையாதே, மகிழ்ச்சி, திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படத்திற்கு “மாவீரா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்கிறார். புகழ்பெற்ற “தலைமுறைகள்” என்னும்நாவலை “மகிழ்ச்சி” என திரைப்படமாகவும், “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும் உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த வ.கௌதமன் “மாவீரா”வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படமாக்குகிறார்.
மேலும் செய்திகள்: கதாநாயகனாக நடிக்கும் வ.கௌதமன்..! அவரே இயக்கி நடிக்கும படத்திற்கு மாஸ் டைட்டில்..!
“எதிரியை கொல்லணும் என்று நினைப்பதை விட அவன் மனதை வெல்லணும்” என்கிற இலக்கோடு இப்படைப்பிருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குனர் அதே நேரத்தில் கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் “அத்து மீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் “மாவீரா” பேசும் என்கிறார்.
பரபரப்பான சம்பவங்களோடு ஆக்ஷன் கலந்து அதிரடியாக உருவாகும் மாவீராவிற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டை பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன் என முன்னணி தொழிநுட்பக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும் செய்திகள்: தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
வி.கே புரடக்ஷன் குழுமம் முதன் முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகளும் சிலர் நடிக்கிறார்கள். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.