விஜய் டிவி (vijay tv) தொலைக்காட்சி தொகுப்பாளினியான ஜாகுலின் (jaquline) தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் பலர், ரசிகர்களின் ஆதரவோடு வெள்ளித்திரையில் ஜொலிக்க துவங்கி விடுகிறார்கள். அந்த வகையில், இன்று முன்னணி நடிகர் - நடிகைகள் பட்டியலில் உள்ள சிவகார்த்திகேயன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்களே. அதே போல், மாகாபா ஆனந்த், ரம்யா, ரக்ஷன் ஆகியோரும் வெள்ளித்திரையில் படங்கள் நடித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த, 'கலக்க போவது யாரு' காமெடி நிகழ்ச்சியின் 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். இவர் நயன்தாரா கதையின் நாயகியாக, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டாலும், அந்த படங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: சில நேரங்களில் தேவையானது இது மட்டுமே... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட கட்டிப்பிடி புகைப்படம்!!
பார்ப்பதற்கு பப்லியாக... கொழு கொழுவென இருக்கும் ஜாக்குலின், தற்போது பல்வேறு ஹெவி ஒர்க்அவுட் செய்து தன்னுடைய எடையை பாதியாக குறைத்துள்ளார். தற்போது செம்ம ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ள ஜாக்குலினின், ஒர்க் அவுட் வீடியோ வெளியாகி பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: வாவ்... பூஜா ஹெக்டேவின் தங்கைகளா இது..? தேவதை போல் இருக்காங்களே... வைரலாகும் போட்டோஸ்!
அதே நேரத்தில் சிலர், ஜாக்குலின் ஹீரோயினாக முயன்று வருகிறார் போல, அதனால் தான் இப்படி பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார் என கூறி வருகிறார்கள். பார்ப்பதற்கு பப்லி பெண்ணாக இருந்த ஜாக்குலினின் இந்த நியூ ட்ரான்ஸ்பர்மேஷன் பார்பவர்களையே பிரமிக்க செய்தாலும், இவரது இந்த விடா முயற்சிக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பீச் பேபியாக மாறிய காஜல் மகன்... தொப்பை தொந்தியோடு அடையாளம் தெரியாமல் மாறி வீடியோ வெளியிட்ட நடிகை!