நடித்துக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடகக் கலைஞர்... மனதை கலங்கவைக்கும் வீடியோ

Published : Jul 19, 2022, 10:21 AM IST
நடித்துக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடகக் கலைஞர்... மனதை கலங்கவைக்கும் வீடியோ

சுருக்கம்

சத்யமங்கலத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் ஒருவர் மேடையில் நடித்துக்கொண்டு இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

சத்யமங்கலம் அருகே உள்ள குப்பந்துறை எனும் கிராமத்தில், மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாடகம் மொத்தம் 5 நாட்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் இரணியன் நாடகம் 5 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குப்பந்துறை கிராமத்தை சேர்ந்த ராஜய்யன் என்னும் 62 வயது முதியவர் தான் இந்த நாடகத்தை முன்னின்று நடத்துவார்.

ராஜய்யன் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்து வந்தனர். இதன் கடைசி நாளான்று இதில் நாரதர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜய்யன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன சக கலைஞர்கள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தனர். 

இதையும் படியுங்கள்... பான் இந்தியா படமாக ஏ கே 61..டோலிவுட் நடிகர்களை களமிறக்கும் படக்குழு!

அதன்பின்னரும் அவர் பேச்சு மூச்சின்றி இருந்ததால் உடனடியாக அவரை சத்யமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜய்யனின் மறைவு அவருடன் பணியாற்றியவர்களுக்கும், அவருடையை குடும்பத்தினருக்கும் பேரிழப்பாக அமைந்தது. 

நாடகத்தின் மீது உயிராக இருந்த ராஜய்யன், நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Vadivel Balaji : சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்க! வறுமையால் கலங்கி நிற்கும் வடிவேல் பாலாஜி குடும்பம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!