Mani Ratnam : பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மணிரத்னம். திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், இன்றளவும் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் தயாராகி வருகிறது.
மணிரத்னத்தின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சித்து வந்த அவர், தற்போது ஒரு வழியாக அப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இதில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஹிந்தியில் பேசும் விஜய்சேதுபதி!
பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர். அதன்படி முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டில் மாஸாக எண்ட்ரி கொடுக்க உள்ள லோகேஷ் கனகராஜ் - ஹீரோ யார் தெரியுமா?