தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'வாரிசு' படத்தில் இடம்பெற்ற, 'ரஞ்சிதமே' பாடல், 'தீ தளபதி' பாடல் மற்றும் 'Soul of varisu' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் காத்திருந்தனர்.
அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின் அடிப்படையில், 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், மிகப் பிரமாண்டமாக நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து எவ்வித, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில்... தற்போது 'வாரிசு' படத்தை தயாரித்துள்ள வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆடியோ லான்ச் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
அதன்படி வருகிற 24-ஆம் தேதி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கடைசியாக விஜய் கடந்த 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நடந்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரசிகர்களை விஜய் சந்திக்க உள்ளதால், ஆடியோ லாஞ்சில்
விஜய் என்ன பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
விஷாலை சந்திக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்..! தேர்தலில் போட்டியா? அரசியல் களத்தில் பரபரப்பு!
அதேபோல் விஜயின் குட்டி கதையை கேட்கவும் இப்போதே ரசிகர்கள் தயாராகி உள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், வெளியிடப்பட்டுள்ள தகவலின்... "திரைக்கு வர இருக்கும் தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அனுமதிக்கூப்பன்களை, அனைத்து மாநில, மாவட்ட தலைவர்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The stage is set for the BOSS to arrive 🔥 is on Dec 24th from 4 PM onwards ❤️ sir pic.twitter.com/FvGYchia9c
— Sri Venkateswara Creations (@SVC_official)