இது நமக்கான ஆட்சி; திமுகவை புகழ்ந்த நடிகர் ராதா ரவி

By Velmurugan sFirst Published Dec 21, 2022, 4:30 PM IST
Highlights

திரைத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதா ரவி தற்போது நடைபெற்று வருவது நமக்கான ஆட்சி என்று அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திமுகவை புழந்து பேசியுள்ளார்.
 

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, கலைஞானம், ஆர் கே சுரேஷ், ஆர் பி சவுத்ரி, தேனாண்டாள் முரளி, நடிகர் ராதா ரவி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

விழாவில் கலைப்புலி எஸ்.தானு பேசுகையில், அதிகபட்சமாக பத்து தயாரிப்பாளர்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதை நான் அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறேன். அரசு நிச்சயம் நமக்கு உதவி செய்யும் என்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ராதா ரவி பேசுகையில், இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்ததும் அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார் என்று சொன்னார்கள். கலைஞர் அவர்கள் கலையுலகை சார்ந்தவர். அதனால் அவர் வழி வந்த அமைச்சர் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டது பெரிய ஆச்சரியம் இல்லை. இந்த ஆட்சி நமக்கான ஆட்சி.

நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு

நிகழ்ச்சியில் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பதில் மெடல்களை வழங்கினால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் சான்றிதழ்களை மாட்ட பலருக்கு சுவரில்லை, ஆனால் கழுத்து எல்லோருக்கும் இருக்கிறது. இளைஞர்களுக்கு ஒரு அறிவுரை, தாய், தந்தையரை தயவு செய்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

click me!