தீபாவளி பண்டிகையின் போது, வைக்கப்பட்ட குடும்ப பார்ட்டியில்... சூர்யா - ஜோதிகா மகள் தியா ஆடிய டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான, சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியாவின் லேட்டஸ்ட் நடன வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில்... நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்க இருந்த 'வணங்கான்' படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்திலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இவரைப் போலவே இவருடைய மனைவி ஜோதிகாவும், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான கதைகளையும், சமூக அக்கறை கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் தற்போது மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 'காதல் தி கோர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அவ்வபோது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மற்ற சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிப்பை தாண்டி கணவன் - மனைவி இருவருமே 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம், தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் வெளியான, 'சூரரை போற்று', 'ஜெய்பீம்', 'கார்கி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் சூர்யா, தன்னுடைய தம்பி கார்த்தியை வைத்து தயாரித்த விருமான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் இயக்குனர் ஷங்கர் மகள், அதிதி ஷங்கர் திரையுலக வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சூர்யா - ஜோதிகா இருவருமே முக்கிய பிரபலங்கள் என்பதால் இவர்களை பற்றி எந்த செய்து வெளியானாலும்... அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரப்பி விடுவார்கள். அதேபோல் சூர்யா ஜோதிகா மகன் மற்றும் மகள் குறித்து எந்த செய்திகள் வந்தால் சொல்லவா வேண்டும்..?.
சூர்யா ஜோதிகாவின் மகள் தியா, ஸ்போர்ட்ஸ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இவருடைய டான்ஸை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது குடும்ப பார்ட்டி ஒன்றில், தியா டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக அது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ இதோ