Beast Teaser : நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் நடிப்பில் தயாராகி உள்ள பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ரிலீசுக்கு ரெடியான பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில், நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
டீசர் ரிலீஸ் எப்போது?
ஏற்கனவே வெளியான இப்படத்தின் 2 பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் வைரல் ஹிட் ஆனது. இப்பாடல் வெளியான 33 நாட்களிலேயே யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்தனர். சிவகார்த்திகேயன் இப்பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த அப்டேட்டாக அதன் டீசர் வெளியாக உள்ளதாம். வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பீஸ்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த டீசர் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ShahRukhKhan movie : அட்லீ - ஷாருக்கான் படம் என்ன ஆனது?... அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்து வெளியான முக்கிய தகவல்