
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்: படுக்கை அறையில் நடிகையுடன் நெருக்கமான காட்சி! விவாகரத்துக்கு காரணம் இதுவா? பற்றி எரியும் நடிகரின் பிரச்சனை!
இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். அதே போல் வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிகை ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகி இருக்கும். ஊரான ஊரடங்கு காரணமாக கிட்ட தட்ட 50 நாள் இடைவெளிக்கு பின், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: படுக்கைக்கு மறுத்ததால் பறிபோன பட வாய்ப்பு! மாநிறத்தால் நிராகரிப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் வலி நிறைந்த வெற்றி!
குறிப்பிட்ட நாளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகாததால் தீபாவளி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், பரட்டை தலையுடன் யங் லுக்கில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.