அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்த நடிகை குஷ்பு - ஆர்.கே.செல்வமணி !

By manimegalai aFirst Published May 26, 2020, 1:56 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கு பிரச்சனை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக திரைப்படம் உள்ளிட்ட அனைத்து விதமான ஷூட்டிங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு முதலில் அனுமதி கொடுத்த தமிழக அரசு, பின்னர் ஒரு சில கட்டுப்பாடுகளுடன், சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியது.
 

கொரோனா ஊரடங்கு பிரச்சனை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக திரைப்படம் உள்ளிட்ட அனைத்து விதமான ஷூட்டிங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு முதலில் அனுமதி கொடுத்த தமிழக அரசு, பின்னர் ஒரு சில கட்டுப்பாடுகளுடன், சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்: படுக்கை அறையில் நடிகையுடன் நெருக்கமான காட்சி! விவாகரத்துக்கு காரணம் இதுவா? பற்றி எரியும் நடிகரின் பிரச்சனை!
 

இதுகுறித்து மே 21 தேதி, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தாவது,  சீரியல் பணிகள் வெளியிடங்களிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலும் நடைபெற கூடாது. வீட்டின் உள்ளேயோ... அல்லது அரங்கத்திற்குள் தான் படபிடிப்புகள் நடத்தப்பட வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் நடிகர் - நடிகைகளை தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எந்நேரமும் மாஸ்க் அணிய வேண்டும். ஷூட்டிங் நடக்கும் இடத்தை, இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக விலகலை கடைபிடித்து பணியாற்ற வேண்டும், அதே போல் ஷூட்டிங் பார்ப்பதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது, என்றும் குறிப்பிட்ட பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இன்று நடிகை குஷ்பு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட சிலர் செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம்,எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கூடுதல் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்: ராகவா லாரன்ஸின் ஆசிரமத்தில் இருக்கும் 10 மாணவிகள்... 5 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா!
 

இந்த சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்... சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் 3000 பணியாளர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் வெளியூரில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் கலைஞர்கள் அனைவரும் உரிய கொரோனா பரிசோதனைக்கு பின்னரே வர வேண்டும். அரசு சார்பில் போடப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் படப்பிடிப்புகளில் கடுமையாக பின்பற்றப்படும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: இரண்டு சகோதரர்களை பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரோட்டில் நின்று வேலை செய்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
 

இதைத்தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அனைவரும், ஊழியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யார் முதலில் படப்பிடிப்பை துவங்குவார் என்கிற போட்டி இல்லை. அணைத்து சின்னத்திரை படப்பிடிப்புகளும் துவங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர், முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவை எடுக்க தெரிவிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!